Tuesday, October 5, 2010

B.Sc., II nd Year – செய்யுள் திரட்டு Fifth Semester IInd Internal

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
(திருவள்ளுவர் பல்கலைக் கழக இணைப்பு பெற்றது)
மயிலம் 604 304
B.Sc.,  II nd Year – Fifth Semester
                                           Second Internal Examination - 2010
செய்யுள் திரட்டு

காலம்                : 2மணி
மதிப்பெண்         : 75
பகுதி                                                  10X2=20
அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக
1.        திருக்குறள்- குறிப்பு வரைக.
2.        சிலப்பதிகாரம்-குறிப்பு வரைக.
3.        மணிமேகலை-குறிப்பு வரைக.
4.        சீவக சிந்தாமணி-குறிப்பு வரைக.
5.        கம்பராமாயணம்-குறிப்பு வரைக.
6.        ஐஞ்சிறுங்காப்பியங்களை எழுதுக.
7.        பெருங்காப்பியம் ஐந்தினைக் எழுதுக.
8.        பதினெண் கீழக்கணக்கு நூல்களைப் பட்டியலிடுக.
9.        காப்பிய இலக்கியத்தின் தன்மைகள் யாவை?
10.     மணிமேகலை சிலப்பதிகாரம் இடையே உள்ள உறவினை விளக்குக.

                                                பகுதி                 5X 5=25
அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக.
11.     விருந்தோம்பும் பண்பு குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை விளக்கி உரைக்க.
12.     வள்ளுவர் கூறும் பெருமையின் சிறப்பினை எடுத்து எழுதுக.
13.     நும்பாடப்பகுதியில் இடம்பெறும் நூல்களுல் ஒன்றினை மதிப்பிடு செய்க.
14.     நமது கல்லூரியில் அண்மையில் நிகழ்வுற்ற விழா குறித்து செய்தி அறிக்கையை தயார் செய்க.
15.     உங்கள் ஊரில் போக்குவரத்து வசதி வேண்டி போக்குவரத்துத் துறை ஆணையருக்குக் கடிதம் எழுதுக.


பகுதி இ                2 X10=20        
கட்டுரை வடிவில் எழுதுக.
16.நும் பாடப்பகுதியில் இடம் பெறும் காமத்துப்பால் குறித்த செய்திகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
17.மணிமேகலை பாத்திரம் பெற்ற காதையைக் கட்டுரை வடிவில் எழுதுக.
18.விமலை பந்தாடிய சிறப்பினையும் சகாரதத்தன் சீவகனிடம் உரைத்த செய்தியினையும் கட்டுரை வடிவில் எழுதுக.

M.A. Ist Yr இதழியலும் மக்கள் தகவல் தொடர்பியலும் 2nd internal


ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
(திருவள்ளுவர் பல்கலைக் கழக இணைப்பு பெற்றது)
மயிலம் 604 304
முதுகலைத் தமிழ்,
முதலாமியாண்டு - முதல் பருவம்
அகமதிப்பீட்டுத் தேர்வு இரண்டு
இதழியலும் மக்கள் தகவல் தொடர்பியலும்

காலம்                : 2மணி
மதிப்பெண்         :   75
பகுதி                                                                              7X5=35
அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக
1.      பத்திரிகைத் துறையினருக்குத் தேவையான தகுதிகளை எழுதுக.
2.      வானொலி நிகழ்ச்சிகளை வகைப்படுத்தி விளக்குக.
3.      துணை ஆசிரியரின் பொதுப் பணிகள் யாவை?
4.      செய்தி திரட்டும் வழி முறைகள் யாவை?
5.      கேலிச் சித்திரங்களையும் அவற்றின் வகைகளையும் விளக்குக.
                                    பகுதி                                          2X 20=40
கட்டுரை வடிவில் விடை தருக.
6.      இதழியல் வரலாறு விரிவாக கட்டுரை வரைக.
7.      செய்தி எழுதப்படும் முறையும் பக்கம் வடிவமைத்தலும் கட்டுரை வடிவில் எழுதுக.

Saturday, August 21, 2010

நினைவகம்

வரலாறு

முதலாவது சார்பிலாத் தெரிவு வகை நினைவகம் 1951 இல் உருவாக்கப்பட்ட காந்த உள்ளக நினைவகம் (magnetic core memory) ஆகும், இது பின் 1960கள் மற்றும் முன் 1970களில் ஒருங்கிணைச் சுற்று நினைவகம் உருவாக்கப்படும் வரை அனைத்து கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. காந்த உள்ளக நினைவகம் உருவாக்கத்திற்கு முன்னர் கணினிகளில் நினைவக செயற்பாடுகளுக்கு அஞ்சல் சுற்று (relay) அல்லது வெற்றிட குழாய் (vacuum tube) பயன்படுத்தப்பட்டது.


தற்காலிக நினைவகம்சார்பிலாத் தெரிவு நினைவகம்
சார்பிலாத் தெரிவு நினைவகம் (குறுஞ்சொல் RAM) கணினி நினைவக வகையாகும். அது ஒருங்கிணைச் சுற்று(integrated circuits) ஒன்றின் வடிவத்தில் அமைவதுடன் சேமிக்கப்படும் தரவுகள் எந்த ஒழுங்கிலும் பெற்த்தக்கவகையில் அமையும். சார்பிலாத் தெரிவு என்பது தரவுகள் சேமிக்கப் பட்ட ஒழுங்கு தவிர்ந்த வேறு சார்பிலாத் ஒழுங்குகளிலும் தரவுகள் தெரியப்படலாம் என்பது ஆகும்.
சார்பிலாத் தெரிவு நினைவகம் காந்த நாடா, காந்த வட்டு மற்றும் ஒளியியல் வட்டு போன்ற நினைவக முறைகளில் இருந்து வேறுபடுகிறது. இந்த இதர முறைகளில் வாசிப்பு கருவிகளின் பௌதிக அசைவு மூலமே தரவுகள் வாசிக்கப்படும். இதனால் இவற்றில் வாசிப்பு நேரத்தைவிட தரவு உள்ள இடத்தை அடைவு நேரமே(seek time) அதிகமாகும்.
RAM எனும் சொற்பதம் பெரும்பாலும் தற்காலிக நினைவகத்துடனேயே தொடர்புபடுத்தப்படுகிறது. இவற்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சேமிக்கப்பட்ட தரவுகள் இழக்கப்படுவிடும். எனினும், வேறு வகையான நினைவகங்களும் RAM ஆகும், அதாவது நிலை நினைவகம்(ROM) போன்றனவும் சார்பிலாத் தெரிவு நினைவகம் என்றே வகைப்படுத்தப்படும். ஏனெனில் சார்பிலாத் தெரிவு என்பது வாசிப்பு முறை மட்டுமே.

Saturday, August 14, 2010

M.A. I-Yr Ist Internal

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
(திருவள்ளுவர் பல்கலைக் கழக இணைப்பு பெற்றது)
மயிலம் 604 304
முதுகலைத் தமிழ்,
முதலாமியாண்டு - முதல் பருவம்
அகமதிப்பீட்டுத் தேர்வு – ஒன்று

காலம் : 2மணி
மதிப்பெண் : 75                                        பகுதி – அ                     7X5=35

அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக
1. மக்கள் தகவல் தொடர்பு - சொற்பொருள் விளக்கம் தருக.
2. வானொலி விதிகளைப் பட்டியலிடுக.
3. வானொலி நிகழ்ச்சிகளின் நோக்கத்தை விளக்குக.
4. சமுதாயத்தில் திரைப்படத்தின் தாக்கம் குறித்து எழுதுக
5. மக்கள் தொடர்புச் சாதனங்களைப் பட்டியலிட்டு விளக்குக.

                                                            பகுதி – ஆ                            2 X 20=40
கட்டுரை வடிவில் விடை தருக.
6. பத்திரிகைத் துறை மக்களாட்சியின் அங்கம் என்பதை நிறுவுக.
7. சமுதாய வளர்ச்சியில் மக்கள் தகவல் தொடர்புச் சாதனங்களின் பங்கினை அளவிடுக.

Friday, August 13, 2010

B.Lit- III Year 5th sem 1st Internel Exam

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
(திருவள்ளுவர் பல்கலைக் கழக இணைப்பு பெற்றது)
மயிலம் 604 304

மூன்றாமியாண்டு பி.லிட். - ஐந்தாம் பருவம்
அகமதிப்பீட்டுத் தேர்வு – ஒன்று
காலம் : 2மணி
மதிப்பெண் : 75
                                                      பகுதி – அ                          10X2=20
அனைத்து வினாக்களுக்கும் ஒரு பத்தி அளவில் விடைஎழுதுக

1. கணினி சொற்பொருள் விளக்கம் தருக.
2. வன்பொருள் (hardware) - விளக்குக.
3. மென்பொருள் (software) – விளக்குக.
4. இணையத்தின் பயன்பாடுகள் இரண்டினைக் குறிப்பிடுக.
5. இணையம் – குறிப்பு வரைக.
6. மின்னஞ்சல் (e-mail) –விளக்குக
7. மின்னஞ்சலின் பயன்பாடுகளைக் குறி்ப்பிடுக.
8. உலாவி(search engine) -குறிப்பு வரைக.
9. நவீன கணினியின் முன்னோடிகள் யாவை?
10. RAM என்றால் என்ன?
11. ROM என்றால் என்ன?

                                                      பகுதி – ஆ                                  5 X5=25
கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடை தருக.

12. செயலிகளின் (Processor) வரலாற்றை விவரி.
13. மென்பொருள், வன்பொருள் குறித்து விளக்குக.
14. கணினியின் அமைப்புச் செயல்பாடு குறித்து விளக்குக.
15. கணினியின் தலைமுறை வரலாற்றை விவரிக்க
16. இணையதளக் (Internet Theory) கோட்பாடுகள் – விளக்குக.

                                                        பகுதி – இ                          2 X15=30
கீழ்க்காணும் வினாக்களுக்குக் கட்டுரை வடிவில் விடை எழுதுக.

17. இணையம், இணையத்தின் பயன்பாடுகள் குறித்து கட்டுரை வரைக.
18. கணினியின் பயன்களைப் பட்டியலிட்டு, உரிய சான்றுகளுடன் கட்டுரைக்க.

Wednesday, August 11, 2010

B.Sc., 4th sem Ist Internal 2010

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
(திருவள்ளுவர் பல்கலைக்கழக இணைப்பு பெற்றது)
மயிலம் 604 304

இரண்டாமியாண்டு B.Sc. - நான்காம் பருவம்

அகமதிப்பீட்டுத் தேர்வு – ஒன்று
2010-2011


காலம்           :  2 மணி
மதிப்பெண்   : 75
                                                                 பகுதி – அ                                     10X2=20

அனைத்து வினாக்களுக்கும் ஒரு பத்தி அளவில் விடைஎழுதுக

1. திருக்குறள் குறித்து நீவிர் அறிந்தவற்றை எழுதுக.

2. அறத்தின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவனவற்றை எழுதுக.

3. குறிப்பறிதல் என்றால் என்ன?

4. ஐம்பெருங்காப்பியங்கள் எவை?

5. மேகம் குன்றினால் என்ன நிகழும் என வள்ளுவர்
    குறிப்பிடுகிறார்?

6. தமிழர்களின் விருந்தோம்பல் திறம் குறித்து எழுதுக.

7. நும் பாடப்பகுதியில் அமைந்துள்ள திருக்குறள்
   அதிகாரத் தலைப்புகளின்   பொருளை எடுத்துரைக்க.

8. நெஞ்சொடு புலத்தல் என்றால் என்ன?

9. சிலப்பதிகாரம் – குறிப்பு வரைக.

10. இளங்கோவடிகள் – குறிப்பு வரைக.

                                                                         பகுதி –  ஆ                             5 X5=25

கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடை தருக.

11. உலகம் இயங்க மழை ஏதுவாதலை வள்ளுவர் எங்ஙனம்
      இயம்புகிறார்?

12. ஆள்வினையின் சிறப்புகளை எழுதுக.

13. கோசிகமணி கோவலனிடம் கூறியவற்றைத் தொகுத்துரைக்க.

14. அறம் செய்வதால் ஏற்படும் நன்மை குறித்து வள்ளுவர்
      கூறுவன வற்றைத் தொகுத்துரைக்க.

15. கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் சென்ற வழியின்
      ஏதம் குறித்து   எழுதுக.

                                                                பகுதி – இ                                     2 X15=30

கீழ்க்காணும் வினாக்களுக்குக் கட்டுரை வடிவில் விடை எழுதுக.

16. விருந்தோம்பல் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றைத்   
      தொகுத்துரைக்க.

17. மதுரையின் சிறப்புகளாகப் பாணர்கள் விளக்கிய திறத்தினை   
      கட்டுரைக்க.

Monday, August 9, 2010

எங்கெங்கு காணினும் செந்தமிழ் முழங்கட்டும்

அன்பிற்கினிய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இவ்வலைப்பதிவில் தங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்க.
ஏதேனும் ஐயம் ஏற்படும் வேளையில் கீழ்க்காணும் என்னுடைய மின்னஞ்சலில் தொடர்புகொண்டு பயன்பெறுக.
மேலும் புதிய தகவல்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட பதிவினைச் சொடுக்குக.
வாழ்த்துகளுடன்
எழில்வசந்தன்